twitter
    தேவேந்திரர் முன்னேற்ற முன்னணி

உத்திரபிரதேச முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவியுமான செல்வி மாயாவதி அவர்களின் காலணியை பாதுகாப்பு அதிகாரி ஒருவர் துடைத்து விட்டாராம். பார்ப்பன ஏடுகளும், பனியா ஏடுகளும் பதறுகின்றன. காங்கிரஸ் கண்டனம் தெரிவிக்கிறது. "ஆட்சியில் உள்ளவர்களின் ஷூக்களை சுத்தம் செய்வது போன்ற செயல்கள், தவறான முன் உதாரணமாக அமைந்து விடும்" என்றும் அலறியிருக்கிறார் காங்கிரசின் அகிலேஷ் பிரதாப் சிங். இது கிடக்கட்டும். இது போன்ற செயல்கள் "முன் உதரணமாக" அமைந்து விடும் என்று எந்த முகத்தை வைத்து காங்கிரஸ் இப்படி சொல்ல முடியும் என்பதை முதலில் சிந்திக்கட்டும்.

என்.டி.திவாரி. ஆந்திராவின் கவர்னராக இருந்த பொது தள்ளாத வயதிலும், தளராமல் கவர்னர் மாளிகையிலேயே காமக் களியாட்டம் நடத்தி இளைய தலைமுறையை ஆச்சர்யர்த்தில் ஆழ்த்தியவர்! இவர் உத்திரபிரதேச முதல்வராகவும் இருந்திருக்கிறார். அப்போது தான் அந்த அவலத்தையும் அரங்கேற்றியிருக்கிறார். பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அப்போதைய காங்கிரசின் முதலாளிகளில் ஒருவரான சஞ்சய் காந்தியின் கால் செருப்புகளை தன் கையால் தாங்கிக்கொண்டு விசுவாசத்தை வெளிபடுத்திய என்.டி.திவாரியை இன்னமும் கட்சியில் வைத்துக்கொண்டு தான் "ஷூக்களை துடைப்பது போன்ற செயல்கள், தவறான முன் உதரணமாக அமைந்து விடும்" என்று காங்கிரஸ் கட்சி கண்டிக்கிறது. "இந்திர காந்தி என்னை பெருக்கச் சொன்னாலும் அதை செய்யத் தயங்காதவன்" என்று குடியரசுத் தலைவரான பின்பும் கூச்சமின்றி கூறி துதி பாடும் ஜெயில் சிங் போன்ற கூட்டம் சகோதரி மாயாவதி பின்னல் எப்போதும் இருந்ததில்லை. இருக்கவும் முடியாது.

காலணிகளை துடைத்தவர் மாயாவதியின் பாதுகாப்பு காவல் அதிகாரி. விமானப் பயணத்தின் பொது தூசி படிய வாய்ப்பில்லாத காரணத்தால், மாயாவதியின் பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படுத்தும் பொருள் எதாவது அவரின் ஷூக்களில் படிந்திருக்கிமோ என்ற சந்தேகத்தில் அவர் துடைத்திருக்கிறார். அவர் துடைத்த செயலும் தானாகவே, தற்செயலாகத் தான் நடந்திருக்கிறது. செல்வி மாயாவதி சொல்லி நடைபெறவும் இல்லை. எதிர்கட்சியாக இருப்பவை இந்தியாவில் எதிரிக்கட்சியாக தானே செயல்படுகின்றன. ஆகையால் தான் "பாதுகாப்பு அதிகாரியை வைத்து ஷூவை சுத்தம் செய்ய வைத்துள்ளார் மாயாவதி" என சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ் அர்த்தமின்றி ஆத்திரத்தில் உளறியிருக்கிறார்.

பரதன் தன் அண்ணனாகிய ராமனிடம் பெற்ற பாத அணிகளை (காலணிகளைக்) கொண்டு பாரதத்தை ஆண்டதை, பண்பின் அடையாளமாகவும், பக்தியின் பொருட்டாகவும் பார்க்கும் பார்பனர்களுக்கும், பனியாக்களுக்கும் அவர்கள் நடத்தும் பத்திரிகைகளுக்கும், பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவி செல்வி மாயாவதியின் காலணிகளை பாதுகாப்பு கருதி பாதுகாப்பு அதிகாரி ஒருவர் துடைப்பது மட்டும்  குற்றமாகத் தெரிகிறதா? ஏன் எனில் பகுஜன் ஆட்சி மக்கள் ஆதரவோடு அதிவிரைவிலேயே செல்வி மாயாவதி தலைமையில் மத்தியில் மலரும் சமயத்தில் இவர்களுக்கு இந்தியாவில் வேலை இல்லை என்பது இவர்களுக்கு தெரியும்.

0 comments:

Post a Comment