twitter
    தேவேந்திரர் முன்னேற்ற முன்னணி


ஒரு மாத காலத்தில் தமிழகத்தில் தேர்தல் வரவிருப்பதால், தேர்தல் ஜீரம் திராவிடக் கட்சிகளோடு, தேசியக் கட்சிகளையும் தீவிரமாகவே பற்றிக் கொண்டிருக்கிறது. ஓட்டுக்களை பெற்று ஆட்சி அமைப்பதே அவர்களின் காய்ச்சலுக்கு மருந்தாக இருக்கும் என்பதால், அறிவிப்புகளும், நலத்திட்டங்களும் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக நம்மைத் தேடி  வந்தன. திருவிழாக்கள், திருமணங்கள் என்று மறைமுகமாக வந்து  கொண்டும் இருக்கின்றன. கண்டுகொள்ளப்படாத கோரிக்கைகளும் தற்போது ஆட்சியாளர்களின் காதுகளுக்கு எட்டுகின்றன. அவைகள் கனிவாகவும் கவனிக்கப்படுகின்றன. வித்தியாசங்கள் பார்க்கப்படுவதில்லை. 234 சட்டசபைத் தொகுதிகளிலும் வெற்றியைப் பெற வேண்டும் என்ற கனவுடனும், ஆட்சியை அமைத்தே தீர வேண்டும் என்ற வெறியுடனும் ஒவ்வொரு கட்சியும் அரசியல் சதுரங்கத்தில் காய்களை அருமையாக நகர்த்தியும், அந்தந்த தொகுதிகளில் வாழும் பெரும்பான்மை சமூக மக்களை கவரும் விதமாக அதன் இனத் தலைவர்களை வளைத்தும் கொண்டிருக்கின்றன. ஓட்டுக்கும், சில சீட்டுக்கும் தன் இன மக்களின் நலன்களை தாரை வார்க்க அவர்களும் தயாராகவே இருக்கின்றனர்.

  தேவேந்திரர்களின் விசயத்திற்கு வரலாம். ”பள்ளன், குடும்பன், பண்ணாடி” உள்ளிட்ட ஏழு உட்பிரிவுகளை ஒன்றிணைத்து ”தேவேந்திர குல வேளாளர்” என அறிவிக்க வேண்டும் பொருட்டு, தொண்டை வறண்டு போகும் அளவிற்கு தொடர்ந்து கத்திய பிறகும் கண்டு கொள்ளாமல் அமைதி காத்த அதே கருணாநிதி,  தற்போது தேர்தல் வருவதால் தானே முந்தியடித்துக் கொண்டு நீதிபதி ஜனார்த்தனன் அவர்களைக் கொண்டு ஒரு நபர் கமிசன் அமைக்கிறார். தேவேந்திரர்களின் வாக்குகளில், தானும், தன் மகனும் ஆட்சியில் அமர்ந்து கொண்டும், பதவி சுகத்தை அனுபவித்துக் கொண்டும், துப்பாக்கித் தோட்டாக்களை நம் (சுரேசு தேவேந்திரர்) மீது பாய்ச்சிய அதே கருணாநிதி தான், அடுத்த முறையும் ஆட்சிக்கு வர வேண்டி ஒரு நபர் கமிசனை அமைத்து, தொடர்ந்து நம்மை ஏமாற்ற நினைக்கிறார். நரம்பில்லாத நாக்கு நான்கு பக்கமும் திரும்பும் என்ற பழமொழிக்கு உருவகமாக இருப்பதால் தானோ என்னமோ, தேவேந்திர குலத்தின் சம்பந்தி என்று தன்னைத் தானே கூறியதை தற்போது வசதியாக மறந்து விட்டார். சரி, அது கிடக்கட்டும். தேவேந்திர குல வேளாளர்களை, தேவேந்திர குல வேளாளர்கள் என்று அறிவிக்கலாமா என ஆராய(!) கமிசன் அமைத்திருக்கும் கருணாநிதி உத்தரவை காமெடியாக கருதாமல் வேறு எப்படிக் கருத முடியும்.


 நமது வாக்குகளை வளைப்பதில், எதிர்க்கட்சிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. எதிர்(ரி)க்கட்சியான அ.தி.மு.க-வும் பிரித்தாளும் சூழ்ச்சியை பயன்படுத்தி நமது வாக்குகளை வாங்குவதற்கு திட்டம் தீட்டுகின்றன. ”சாமி” ஏற்கனவே ”இலை” நோக்கி சாய்ந்து விட்ட நிலையில், பாண்டியர்கள் தன்கள் பலங்களை காட்டி இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் நோட்டம் விடுகின்றனர். தேவேந்திர குல மக்களை, தேவேந்திர குல வேளாளர் என அறிவித்தால்(!) பாராட்டு விழா நடத்த ராஜன் தயாராகிறார். ”மலை” மட்டும் மௌனம் காக்கிறது. இது போக தேர்தல் மழையில்  முளைத்த சிறிய தேவேந்திர காளான் கட்சிகளும், அமைப்புகளும் திராவிடக் கட்சிகளின் கரன்சிகளை குறி வைத்துக் காத்துக் கொண்டிருக்கின்றன. இன்னும் சிலரோ அமைப்புகளை ஆரம்பிக்கும் விதமாக ஆழ்ந்த சிந்தனையில் உள்ளனர்.

இத்தனையும் எதற்கு என்பது நமக்குத் தெரியாத அதே வேளையில், வாக்கு என்பது வலிமையானது என்பது அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. ஏனெனில், தேவேந்திரர்கள் வாக்குகள் யாருக்கு பெருமளவில் விழுந்திருக்கிறதோ, அவர்களே ஆட்சி அமைத்திருக்கிறார்கள் என்பது கடந்த கால வரலாறு. இதை ஏதோ எதுகை, மோனைக்காக எழுத வில்லை. பார்ப்பன ஏடான ”தி ஹிந்துவே” கடந்த தேர்தல் முடிவுகள் வெளிவந்த காலத்தில் பதிவு செய்த விசயம் இது. வாக்கு என்பது வலிமையானது. அதனால் தான் அண்ணல் அம்பேத்கரும் ”ஒரு மனிதன், ஒரு வாக்கு; ஒரு வாக்கு, ஒரு மதிப்பு” என்று கூறி பட்டதாரிகளுக்கும், பட்டாதாரிகளுக்கும் (ஜமீன்களூக்கும்) மட்டுமே வழங்கபட்ட வாக்குரிமையை, பாமரன் உள்ளிட்ட அனைத்து மக்களும் பெறும் வண்ணம் அரசமைப்புச் சட்டத்தை வடிவமைத்தார். அப்படிப்பட்ட விலை மதிப்பில்லாத வாக்குகளை, தேவேந்திர குலத்தை ஆதி திராவிடர் எனும் குறிக்குள் அடைத்து, நம்மை தொடர்ந்து சிறுமைப்படுத்தும் கருணாநிதியின் தி.மு.க-விற்கும், எந்தக் கூட்டம் நமது உரிமை காக்க வேண்டி போராடிய இமானுவேல் சேகரனாரை கொடூரமாக கொலை செய்தததோ அந்தக் கூட்டத்தின் ஆசி பெற்ற அ.தி.மு.க-விற்கும் தான் தேவேந்திர மக்கள் தங்கள் வாக்குகளை தொடர்ந்து அளித்து வருகிறார்கள் என்பது தான் வேதனைக்குரிய விசயம்.


மேலும் இனத் தலைவர்களை நம்புவது என்பது நண்டைச் சுட்டு நரியை காவலுக்கு வைத்த கதையாக மாறிவிட்டது. ஒன்று மட்டும் நிச்சயம். இனியும் தெளிவு பெறாமல் 500-க்கும், 1000 ரூபாய்க்கும் ஓட்டுகளை விற்பதும், வெளுத்தது எல்லாம் பால் என்று எண்ணி இனத் தலைவர்களை நம்பி இனியும் ஏமாறுவது என்பதும் பாடையில் நாமே சென்று படுத்துக் கொள்வதற்குச் சமம். இனியாவது சிந்திக்க வேண்டும் என் இன மக்கள்.



உத்திரபிரதேச முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவியுமான செல்வி மாயாவதி அவர்களின் காலணியை பாதுகாப்பு அதிகாரி ஒருவர் துடைத்து விட்டாராம். பார்ப்பன ஏடுகளும், பனியா ஏடுகளும் பதறுகின்றன. காங்கிரஸ் கண்டனம் தெரிவிக்கிறது. "ஆட்சியில் உள்ளவர்களின் ஷூக்களை சுத்தம் செய்வது போன்ற செயல்கள், தவறான முன் உதாரணமாக அமைந்து விடும்" என்றும் அலறியிருக்கிறார் காங்கிரசின் அகிலேஷ் பிரதாப் சிங். இது கிடக்கட்டும். இது போன்ற செயல்கள் "முன் உதரணமாக" அமைந்து விடும் என்று எந்த முகத்தை வைத்து காங்கிரஸ் இப்படி சொல்ல முடியும் என்பதை முதலில் சிந்திக்கட்டும்.

என்.டி.திவாரி. ஆந்திராவின் கவர்னராக இருந்த பொது தள்ளாத வயதிலும், தளராமல் கவர்னர் மாளிகையிலேயே காமக் களியாட்டம் நடத்தி இளைய தலைமுறையை ஆச்சர்யர்த்தில் ஆழ்த்தியவர்! இவர் உத்திரபிரதேச முதல்வராகவும் இருந்திருக்கிறார். அப்போது தான் அந்த அவலத்தையும் அரங்கேற்றியிருக்கிறார். பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அப்போதைய காங்கிரசின் முதலாளிகளில் ஒருவரான சஞ்சய் காந்தியின் கால் செருப்புகளை தன் கையால் தாங்கிக்கொண்டு விசுவாசத்தை வெளிபடுத்திய என்.டி.திவாரியை இன்னமும் கட்சியில் வைத்துக்கொண்டு தான் "ஷூக்களை துடைப்பது போன்ற செயல்கள், தவறான முன் உதரணமாக அமைந்து விடும்" என்று காங்கிரஸ் கட்சி கண்டிக்கிறது. "இந்திர காந்தி என்னை பெருக்கச் சொன்னாலும் அதை செய்யத் தயங்காதவன்" என்று குடியரசுத் தலைவரான பின்பும் கூச்சமின்றி கூறி துதி பாடும் ஜெயில் சிங் போன்ற கூட்டம் சகோதரி மாயாவதி பின்னல் எப்போதும் இருந்ததில்லை. இருக்கவும் முடியாது.

காலணிகளை துடைத்தவர் மாயாவதியின் பாதுகாப்பு காவல் அதிகாரி. விமானப் பயணத்தின் பொது தூசி படிய வாய்ப்பில்லாத காரணத்தால், மாயாவதியின் பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படுத்தும் பொருள் எதாவது அவரின் ஷூக்களில் படிந்திருக்கிமோ என்ற சந்தேகத்தில் அவர் துடைத்திருக்கிறார். அவர் துடைத்த செயலும் தானாகவே, தற்செயலாகத் தான் நடந்திருக்கிறது. செல்வி மாயாவதி சொல்லி நடைபெறவும் இல்லை. எதிர்கட்சியாக இருப்பவை இந்தியாவில் எதிரிக்கட்சியாக தானே செயல்படுகின்றன. ஆகையால் தான் "பாதுகாப்பு அதிகாரியை வைத்து ஷூவை சுத்தம் செய்ய வைத்துள்ளார் மாயாவதி" என சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ் அர்த்தமின்றி ஆத்திரத்தில் உளறியிருக்கிறார்.

பரதன் தன் அண்ணனாகிய ராமனிடம் பெற்ற பாத அணிகளை (காலணிகளைக்) கொண்டு பாரதத்தை ஆண்டதை, பண்பின் அடையாளமாகவும், பக்தியின் பொருட்டாகவும் பார்க்கும் பார்பனர்களுக்கும், பனியாக்களுக்கும் அவர்கள் நடத்தும் பத்திரிகைகளுக்கும், பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவி செல்வி மாயாவதியின் காலணிகளை பாதுகாப்பு கருதி பாதுகாப்பு அதிகாரி ஒருவர் துடைப்பது மட்டும்  குற்றமாகத் தெரிகிறதா? ஏன் எனில் பகுஜன் ஆட்சி மக்கள் ஆதரவோடு அதிவிரைவிலேயே செல்வி மாயாவதி தலைமையில் மத்தியில் மலரும் சமயத்தில் இவர்களுக்கு இந்தியாவில் வேலை இல்லை என்பது இவர்களுக்கு தெரியும்.



ஒரு லிட்டர் டீசல் 80 ரூபாய் தில்லியில்! இது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான செலவினங்களுக்காக காமன்வெல்த் போட்டி அமைப்பாளரும், காங்கிரஸ் ராஜ்ய சபா உறுப்பினருமான சுரேசு கல்மாடி காட்டிய கணக்கில் இதுவும் ஒன்று. 2003ம் ஆண்டில் 1,620  கோடியாக மதிப்பிடப்பட்டிருந்த செலவினங்கள், கடந்த ஆண்டில் 11,500 கோடிகளாக அதிகரித்து, கடைசியில் 70,608 கோடி அளவிலான மக்களின் வரிப்பணத்தை செலவழித்து, இந்தியாவில் இதுவரையிலான மிகப் பெரிய செலவு செய்து நடத்தப்பட்ட இன்த காமன்வெல்த் போட்டிகளில் தான் காணும் இடமெல்லாம் ஊழலின் கறை படிந்திருக்கிறது. 70,000 மதிப்புள்ள இரண்டு டன் குளிர்சாதனப் பெட்டிகள், சுமார் 1,80,000 ரூபாய்க்கும், ஒரு லட்சம் மதிப்புள்ள ட்ரெட்மில்கள் ஒன்பது லட்ச ரூபாய்க்கும் வாடகைக்கு எடுக்கப்பட்டிருக்கிறது(!?). அதிகத் திறன் கொண்ட சிமுலேட்டர்கள், ஏறத்தாழ இருபது மடங்கிற்கும் அதிகமான முறையில் சுமார் ஒரு கோடியே 16 லட்சம் ரூபாய்க்கும் வாங்கப்பட்டிருக்கிறதுமேலும் பட்டியல் இன மக்களின் மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட நிதியில், 744 கோடி ரூபாயும், ஆதரவற்ற முதியவர்களுக்கான நிதியில் 171 கோடி ரூபாயும் இப்போட்டிகளுக்காக திருப்பி விடப்பட்டிருக்கின்றன. ஏறத்தாழ 8,000 கோடி அளவிற்கு ஊழல் நடந்துள்ள இந்த காமன்வெல்த் போட்டிகளில் கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பது போல கான்கிரசின் சி.பி.-யும் "நா அடிக்கிற மாதிரி அடிக்கிறேன், நீ அழுகிற மாதிரி அழு" என்ற விதத்தில் தனது விசாரணையை தற்போது துவக்கி இருக்கிறது. டெல்லியில் உள்ள ஒரு உணவு விடுதியில் உணவு அருந்திக் கொண்டிருன்தவர்களால் "திருட்டு பய" என "மரியாதை" செய்யப்பட்ட காங்கிரசின் திரு.சுரேசு கல்மாடி, ஊழல் செய்தால், மக்கள் அதையும் விளையாட்டாகவே எடுத்துக் கொள்வார்கள் என நினைத்து விட்டாரோ?

"ஒவ்வொரு இந்தியனும் இரவில் நிம்மதியாக உறங்குகிறான், எல்லையில் வீரர்கள் எப்போதும் விழித்திருப்பதால்" என்கிறது புதுமொழி. மண் போனால் தேசத்தின் மானம் போய் விடும் என்று எண்ணி நினைத்தாலே நடுக்கம் எடுக்கும் உச்சிகளிலும், உறை பனியிலும் போரிட்டு தங்கள் இன்னுயிரை ஈந்த கார்கில் வீரர்களுக்கு ஒதுக்கப்பட்ட குடியிருப்புகளிலும், காங்கிரஸ் ஆளும் மகாராஷ்டிரா அரசு தனது கைவரிசையை காட்டியிருக்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், வேலியே பயிரை மேய்ந்தாற் போல், கண்டிக்க வேண்டிய ராணுவ உயர் அதிகாரிகளே காங்கிரஸ் அரசின் "கைவரிசையில்" பலன் அடைந்திருக்கிறார்கள் என்பது தான். ஆறு முதல் எட்டு கோடி மதிப்பிலான ஆதர்ஷ் குடியிருப்பில் உள்ள ஒவ்வொரு பிளாட்டும் வெறும் 60 முதல் 85 லட்சங்களுக்கே கொடுக்கப்பட்டிருக்கிறது

அதுவும் அப்போதைய மகாராஷ்டிராவின் காங்கிரஸ் முதல்வர் அசோக் சவானின் உறவினர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும், ராணுவ அதிகாரிகளுக்கும் என அனைவருக்கும் சட்டத்திற்கு புறம்பான முறையில் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆதர்ஷ் விவகாரத்தில் அடுத்த அதிர்ச்சியாக, இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளின் கோப்புகளும் காணாமல் போயிருக்கின்றன. மும்பை உயர்நீதிமன்ற நீதிபதிகளான .. மர்வபல்லே மற்றும் ..சால்வி ஆகியோர், வழக்கு சம்மந்தப்பட்ட கோப்புகள் தொலைந்தது பற்றிய முதல் தகவல் அறிக்கையைத் தவிர, ஆதர் முறைகேடு பற்றி வேறு முதல் தகவல் அறிக்கை இதுவரை ஏன் பதிவு செய்யப்படவில்லை என கேள்வி எழுப்பியதுடன், மேலும் இந்த வழக்கை விசாரிக்க கமிட்டி அமைக்கப்படும் என்று கூறி ஏமாற்ற வேண்டாம் என்று காங்கிரஸ் அரசை கடிந்தும் கொண்டுள்ளனர். "கமிட்டிகள் அமைக்கப்படுகிறது, கலைக்கப்படுகிறது. ஆனால் ஒன்றும் நடப்பதில்லை" என்ற நீதிபதிகளின் கருத்துகள் எவ்வளவு தீர்க்கதரிசனமானவை!

"ஊழல் செய்வதில் நாங்கள் ஒன்றும் உங்களுக்கு சளைத்தவர்கள் அல்ல" என் காங்கிரசுக்கு சவால் விட வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டாரோ என்னவோ கர்நாடகத்தின் பாரதிய ஜனதா முதல்வர் Y.M.எடியூரப்பா. ஆதர்ஷ் குடியிருப்பு வீடுகளை அசோக் சவான்  தனது உறவினர்களுக்கு அள்ளிக் கொடுத்தது போல, பெங்களூரு வளர்ச்சிக் கழகத்திற்கு சொந்தமான நிலங்களை தனது மகன்களுக்கும், மருமகனுக்கும் குறைந்த விலைக்கு தாரை வார்த்திருக்கிறார். இவரின் மகளான உமாதேவி என்பவருக்கு இரண்டு ஏக்கர் அரசு நிலம் ஆடஞ தொட்ங்குவதற்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. மேலும் சிமோகா எனும் இடத்தில் மருத்துவமனை கட்டுவதற்கு ஐந்து ஏக்கர் நிலமும், பெங்களூருவில் தொழிற்சாலை துவங்க இரண்டு ஏக்கர் நிலமும் தாரை வார்க்கப்பட்டிருக்கிறது. இந்தப் பட்டியல் இன்னும் நீள்கிறது. கர்நாடகாவின் லோக் ஆயுக்தாவும் எடியூரப்பவிற்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் இருப்பதாக கூறியிருக்கிறது. இருந்தும், அவரால் தொடர்ந்து முதல்வராக இருக்க முடிகிறது.

இந்த லட்சணத்தில் தான், "ஊசியைப் பார்த்து உன் உடம்பில் ஒரு ஓட்டை உள்ளது என சல்லடை சொன்ன கதையாக" ஊழல் மலிந்துள்ள காங்கிரஸ் அரசை கண்டிக்கிறது எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா. அது சரி, முறைகேடுகள் செய்த எடியூரப்பாவை இன்னும் முதல்வராக வைத்துக் கொண்டு, 2G ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை முறைகேடுகளை விசாரிக்க பாராளுமன்ற கூட்டுக் குழு அமைக்க வேண்டி முழு பாராளுமன்ற கூட்டுத் தொடரையும் முடக்க பாரதிய ஜனதாவிற்கு முகம் ஏது?

இந்திய மருத்துவக் கவுன்சில் முன்னாள் தலைவர் கேதன் தேசாய் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கும் பொருட்டு செய்த ஊழல், லலித் மோடியின் .பி.எல் ஊழல், எல்..சி வீட்டுக் கடன் வழங்குவதில் ஊழல், சிட்டி பேங்க் ஊழல், பிரசார் பாரதி ஊழல் என கடந்த 2010ம் ஆண்டு ஊழல்களின் ஆண்டாகவே கடந்திருக்கிறது.

புத்தகமே போடும் அளவிற்கு முறைகேடுகள் நடந்துள்ள 2 ஸ்பெக்ட்ரம் ஊழலை, இந்தக் கட்டுரையின் பத்திகளில் அடக்கி விட முடியாது.

டிரான்ஸ்பரன்சி இண்டர்நேசனல் என்ற ஊழலுக்கு எதிரான சர்வதேச அமைப்பின் மதிப்பீட்டின் படி, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சரக்கு வாகன ஓட்டுனர்கள் மட்டும் ஏறத்தாழ 22,500 கோடி ரூபாய் அளவிற்கு காவல்துறையினருக்கும், எக்சைஸ் அதிகாரிகளுக்கும் லஞ்சமாக அளிக்கிறார்களாம். மேலும், இன்த அமைப்பு 2008ல் நடத்திய ஓர் ஆய்வு, இந்தியாவில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கே சுமார் 900 கோடி அளவிற்கு லஞ்சமாக கொடுத்திருக்கிறார்கள் என்ற அதிர்ச்சித் தகவலை அளித்திருக்கிறது. ஊழல் மலிந்துள்ள 178 நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு 87வது இடம். (காங்கிரஸ், பாரதிய ஜனதா, தி.மு. உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் பட்சத்தில் முதல் இடத்திற்கு சீக்கிரமே முன்னேறலாம்.) இப்படி அலைக்கற்றை ஒதுக்குவது முதல் மக்களின் அன்றாடத் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பது வரை அனைத்திலும் ஊழல் மலிந்துள்ள நிலையில் தான், "ஊழலைப் பொறுத்த வரை என் உதவியாளர்கள் சொல்வது போல் நான்  நெருப்பு" என்று கருணாநிதியும், "காங்கிரஸ் ஒரு போதும் ஊழலை சகித்துக் கொள்ளாது" என்று சோனியாவும், மன்மோகன் சிங்கும் சொல்கின்றனர். அவர்கள் என்னமோ சீரியசாக சொல்வது போன்று தோன்றினாலும், கேட்கும் நமக்கு என்னவோ சிரிப்பு தான் வருகிறது.



பட்டை நாமத்தை நெற்றியில் தாங்கிக் கொண்டு, பார்பனத்தை பகிரங்கப்படுத்தும் டிராபிக் ராமசாமி, பொது நல மனுவாக சமீபத்தில் போட்டிரு ந்தது, சென்னை உயர் நீதிமன்றத்தில் அமை ந்திருக்கும் அண்ணல் அம்பேத்கரின் சிலையை அகற்ற வேண்டும் என்பது தான். தனது மனுவில் அம்பேத்கரின் சிலையை உயர் நீதிமன்ற வளாகத்தில் தொடர் ந்து இருக்க அனுமதித்தால், எதிர்காலத்தில் முத்துராமலி ங்க தேவர், ராமசாமி படையாச்சி சிலைகள் வைக்க அனுமதி கேட்பார்கள் என்றும், அப்படி சிலைகள் வைக்க அனுமதிக்கும் பட்சத்தில் ஜாதி பிரச்சனை ஏற்பட்டு உயர் நீதிமன்ற வளாகம் வன்முறைக்களமாக மாறிவிடும் என்றும், அதனால் அண்ணல் அம்பேத்கரின் சிலையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் அலறியிருக்கிறார்.

அறிவின் உருவகமான அண்ணல் அம்பேத்கரின் நீண்ட அரசியல் சாசனத்தை அயல் நாட்டவரும் விய ந்து பாராட்டும் வேளையில், பார்ப்பன டிராபிக் ராமசாமியின் கண்களை அம்பேத்கர் சிலை உறுத்துவதன் பிண்ணனி என்ன? அரசியல் அமைப்புச் சட்டத்தின் ந்தையான அண்ணல் அம்பேத்கரின் சிலையை நீதிமன்றத்தில் வைக்காமல் வேறு என்கு வைப்பதாம்? மதுரை நகரின் மையப்பகுதியான கோரிப்பாளையத்தில், அதுவும் நடுவே உள்ளே முத்துராமலி ங்கம் சிலையை அகற்ற வேண்டி பொதுநல வழக்கு போடும் துணிச்சல் டிராபிக் ராமசாமிக்கு உண்டா? பொழுதைப் போக்குவதற்காக பொதுநல வழக்குகளை தாக்கல் செய்து, நீதிமன்ற னேரத்தை வீணடித்ததற்காக சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ..இக்பால் மற்றும் ..சிவனானம் ஆகியோரைக் கொண்ட முதன்மைப் பெஞ்ச் கண்டனத்திற்கு ஆளாகியிருக்கும் டிராபிக் ராமசாமியை பகுஜன் சமாஜ் கட்சியுடன், தேவேந்திர முன்னேற்ற முண்ணனி, தேவே ந்திர அறிவுசார் குழுமம் மற்றும் தேவேந்திர கலை, இலக்கிய மாமன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது.